ஆனால் நீங்கள் துரோகிகள்.
(சாந்தி நேசக்கரம்)
-----------------------------------------
வீரமென்போம்
விடுதலை தாகமென்போம்.
போராடிக்களம் வென்ற
வேங்கைகள் கதைகள் சொல்வோம்.
(சாந்தி நேசக்கரம்)
-----------------------------------------
வீரமென்போம்
விடுதலை தாகமென்போம்.
போராடிக்களம் வென்ற
வேங்கைகள் கதைகள் சொல்வோம்.
ஓயாத எம் போர்க்குணத்தை
உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம்.
நினைவு தினங்கள் ஒன்றையும்
மறக்க , தவற விடோம்.
கவனமாய் கவிபடித்துக்
கண்ணீர் வடித்து
தேசியத்தின் பொருளைரைப்போம்.
செல்பியெடுத்துச்
செல்லுலாபேசிக்குள்
சேமித்து முகங்களை
சமூகவலைகளிலே பகிர்ந்து
சத்தியம் செய்வோம்.
வெல்வோம்
வீரம் எங்கள் முகம்
போராட்டம்
எங்கள் பெருங்கொள்கை.
புலத்திலிருந்து போராடுவோம்.
குடியெல்லாம்
போர் தின்னக்கொடுத்து
கடன்பட்டு கப்பலேறி
புலம்பெயர்ந்த போரளிக்கு
பட்டங்கள் சூட்டுவோம்.
துரோகி
காட்டிக் கொடுத்திட்டு
வந்த கைக்கூலி,
றோவன்னா காவன்னாவென்று
கனக்க வகை.....!
அட நாசமாப்போறவங்களே.....!
இந்த இனத்துக்காகவோ
உங்களைத் தொலைத்தீர்கள்?
படிப்பு , வசதி , பணம்
பெருமைகள் பேசி
எதையாவது செய்யாமல்
ஏன் தொலைந்தீர்கள் ?
தினம் சாகும் பலன் பெற்ற சாபங்கள் நீங்கள்.
உங்கள் பெயரால் உங்கள் கதைகளால்
நாங்கள் பெரீய தேசிய விரும்பிகள்.
ஆனால் நீங்கள் துரோகிகள்.
(நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.)
22.06.2017
உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம்.
நினைவு தினங்கள் ஒன்றையும்
மறக்க , தவற விடோம்.
கவனமாய் கவிபடித்துக்
கண்ணீர் வடித்து
தேசியத்தின் பொருளைரைப்போம்.
செல்பியெடுத்துச்
செல்லுலாபேசிக்குள்
சேமித்து முகங்களை
சமூகவலைகளிலே பகிர்ந்து
சத்தியம் செய்வோம்.
வெல்வோம்
வீரம் எங்கள் முகம்
போராட்டம்
எங்கள் பெருங்கொள்கை.
புலத்திலிருந்து போராடுவோம்.
குடியெல்லாம்
போர் தின்னக்கொடுத்து
கடன்பட்டு கப்பலேறி
புலம்பெயர்ந்த போரளிக்கு
பட்டங்கள் சூட்டுவோம்.
துரோகி
காட்டிக் கொடுத்திட்டு
வந்த கைக்கூலி,
றோவன்னா காவன்னாவென்று
கனக்க வகை.....!
அட நாசமாப்போறவங்களே.....!
இந்த இனத்துக்காகவோ
உங்களைத் தொலைத்தீர்கள்?
படிப்பு , வசதி , பணம்
பெருமைகள் பேசி
எதையாவது செய்யாமல்
ஏன் தொலைந்தீர்கள் ?
தினம் சாகும் பலன் பெற்ற சாபங்கள் நீங்கள்.
உங்கள் பெயரால் உங்கள் கதைகளால்
நாங்கள் பெரீய தேசிய விரும்பிகள்.
ஆனால் நீங்கள் துரோகிகள்.
(நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.)
No comments:
Post a Comment