Thursday, August 1, 2013

மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள்


காற்றாய் வருகிறாய்
தேசக்கனலாய் திரிகிறாய்…!
காற்றலையின் இளையெங்கும்
கவிதையாய் வாழ்கிறாய்…!

ஊற்றாய் இசையின் மூச்சாய்
உலகெங்கும் உலவித் திரிகிறாய்….!
எங்கள் காதுகளில் உன் கானம்
தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..!

‘மேஜர் சிட்டுவாய்’
தமிழ் வாழும் உலகெங்கும்
தமிழிசை வாழும் திசையெங்கும்
தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..!

அரும்பு மீசைக்கனவறுத்து
ஆழ்மனக் காதல் நினைவறுத்து
ஈழக்காதல் இதயத்தில் சுமந்து
இலட்சியக்கனவோடு போன புலியே….!

வருவாயொரு பொழுது மீண்டும்
பாடியும் பகிடிகள் விட்டும்
பல கதைகள் பேசியும்
கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….!

இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு
மீளும் நினைவோடு கரைகிறோம்
உன் தோழமைகள் நாங்கள்
உன்னை மீளவும் நினைவேற்றி….!

01.08.2013
– சாந்தி யேர்மனி –

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உன்னை மீளவும் நினைவேற்றி...