நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும் வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....!
அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தார்கள். பாதணி அணியப்படாத வெறும் காலோடு சகதி நிறைந்த ஆற்றுநீரில் இறங்கினான். ஆற்று நீர் அவனை தன் மெல்லிய கால்களோடு இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது.
அவன் பெயரைச் சொல்லிக் கத்தியழுதாள். சிரித்தபடி அவளிடம் வந்தவன் இரத்தம் வழிய ஆற்றோடு அடிபட்டு இழுபட்டுப் போய்க்கொண்டிருந்தான். மெல்லென ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் அவனது குருதியும் கலந்தோடியது. ஆற்றோடு இழுபடும் அவனை நோக்கிக் கைகளை நீட்டியழுதாள் அவன் கண்ணிலிருந்து விடுபட்டுத் தொலைவாகிக் கொண்டிருந்தான்.....!
அவசரமாக எழுந்தாள். சே...கனவு....! உறங்கிக் கொண்டிருந்த மகனின் அறையைத் திறந்து மின் விளக்கைப் போட்டாள். என்னம்மா...! நித்திரைத் தூக்கத்தில் கேட்டான் மகன். சரி படுங்கோ செல்லம்....! சொல்லிவிட்டுத் தன் கட்டிலில் வந்து மீண்டும் சரிந்தாள். ஆனால் அந்தக் கனவில் சிரித்தபடி வந்தவன் இரத்தம் கலந்து ஆற்றோடு அடிபட்டுப் போனது மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது. திரும்ப நித்திரை வர மறுத்தது. மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது.
2009இன் பின்னர் அனேகமான கனவுகள் இப்படித்தான். காணாமற்போனோர் முகங்களும் கடைசியாய் சிரித்தபடி விடை தந்து போனோருமே நிறையும் கனவுகளாகியிருக்கிறது. அவர்கள் பிரிவும் , துயரங்களும் கனவுகளையும் நிம்மதியாய் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.
இன்றைய கனவில் வந்தவனும் 2009இல் காணமற்போனவன். இந்த 5வருடத்தில் ஒருமுறையும் கனவில் வராதவன் இன்று வந்து போயிருக்கிறான். சிலவேளை எங்கேனும் இருப்பானோ ? கைபேசித் திரையைத் தட்டி இணையத்தில் உலாவத் தொடங்கினாள். அவனது பெயரை கூகிளில் அடித்துப் பார்த்தாள் ஏதாவது செய்திகள் அண்மையில் வந்ததோ என தேடினாள்.
அப்படியேதும் இருக்கவில்லை. ஆனால் நினைவுகளில் இருந்து மறந்து போனவன் ஏன் இன்று கனவில் வந்து சில்லறைக்காசுகளை அவளது மகனுக்காக கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் பெரும் குழப்பமாகவே இருந்தது. கனவுகளுக்கு காரணங்கள் ஆய்வுகள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் இதுவரை கனவுகள் பற்றி எவரும் சரியான ஆய்வை காணாமல் இருப்பது பற்றி அந்த நேரம் யோசித்தாள்.
இப்போது கனவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. கனவுகளைப் பகிர்ந்து கொண்டால் அது பலிக்காதென்று சொல்வதை நம்பி பலமுறை தனது கனவுகளை பகிரப்போய் எல்லோரிடமும் நன்றாக வேண்டிக்கட்டியிருக்கிறாள்.
ஒண்டையே ஒரே நினைச்சுக் கொண்டிருந்தால் கனவும் அதுதான வரும்....! எல்லோரும் சொல்வார்கள். அதனால் கனவுகளை யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் அந்தக் கனவிலிருந்து விடுபடும் வரையும் அமைதியின்றி அலைவாள். மௌனமாய் நினைவுகளோடு கரைதலும் பின்னர் மீள எழுதலுமே வளமையாகிப் போனது.
000 000 000
அவனும் அவளும் ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள். அவன் அப்பா அவளது தாய்வழி உறவு. மாமா என்ற மதிப்போடு அவனது அப்பா அவள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் அவனைப் பற்றி ஏதாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பார். அவன் க.பொ.த.சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கணித பிரிவில் உயர்தரத்தை ஆரம்பித்திருந்தான். அவனிலும் 2 வயதால் இளைய அவள் அவனது கடைசித் தங்கையுடன் படித்துக் கொண்டிருந்தாள்.
ஆண்களும் பெண்களும் கலந்து படித்த பாடசாலைக்கு அவள் ஆறாம் வகுப்பில் இணைந்த போது அவனும் கூடவே வருவான். மதியம் பேயயுலவும் என்று நம்பிய புளியமரத்தடியை அவன் வரும் துணிவோடு பயமில்லாமல் கடந்து போவாள். பனைவடலிகளைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவனே துணையாக வந்திருக்கிறான். பின்னர் அவனது கடைசித் தங்கையுடன் சேர்ந்து போகும் போது அவனும் கூடவே அவர்களோடு சயிக்கிளில் வருவான்.
அதிகம் கதைக்க வேண்டிய தேவைகள் இல்லாது போனாலும் அவன் தங்கைக்கு காவலனாய் வரும் போது அவளுக்கும் காவலாயே வருவான். வெள்ளி , செவ்வாய்க்கிழமைகளில் வயிரவர் கோவிலில் பஜனை பாடும் போதும் அவனும் வருவான். நெற்றியில் விபூதியும் சந்தனமும் வைத்து அமைதியாய் வைரவரை வழிபடுவான். சரஸ்வதி பூசைக்கு பேச்சுப்போட்டி , தேவார மனனப்போட்டி எல்லாவற்றிலும் அவனும் கலப்பான். ஆளாளுக்கு போட்டி போட்டு பரிசை வெல்வார்கள்.
எதுவென்று பிரித்தறிய முடியாத உறவிணைப்பு. அவன் வீட்டு வளவில் காய்க்கும் நெல்லிக்காய் , கொய்யாக்காயிலிருந்து எல்லாமே அவன் எல்லோருக்கும் பங்கிடுவான். சிறுவயது மகிழ்ச்சிக் காலங்களில் அவனோடு சேர்ந்து கிளிக்கோடு மறித்தது தொடக்கம் எட்டுப்பாத்தி , மாங்கோடு , கப்பல் கோடு வரையும் போட்டி எப்போதுமே அவனுடன் இருந்து கொண்டேயிருந்தது.
உயர்தரம் கணித பிரிவில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களில் அவன் ஊரிலிருந்து காணாமற்போனான். அது இந்திய இராணுவம் வெளியேற்ற காலம். அவனுடைய அப்பா அவள் வீட்டில் வந்து போகும் நேரமெல்லாம் கண்கள் பனிக்க அவனைப் பற்றிச் சொல்லுவார். என்ன குறைவிட்டனான் ? ஏன் இப்பிடிச் செய்திட்டுப் போனவன் ? அவரது கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அம்மாவுக்குச் சொல்லுவார்....அவன் ஒரு பெரிய ஆளா வருவனெண்டு தான் படிப்பிச்சன்...ஆனால் அவருக்கு நாடு பெரிசெண்டு போயிட்டார்....!
அந்த அப்பாவின் வலியின் கொடுமை அவளுக்கு அப்போது புரிந்ததில்லை. ஆனால் அவனைப் பற்றி பெருமையாக இருந்தது. மனசில் சின்ன நெருடல் அவ்வப்போது இருந்தாலும் அவன் ஒருநாள் துவக்கோடு ஊரில் வந்து வரிச்சீருடையுடன் அவளையும் தாண்டி மோட்டார் சயிக்கிளில் போன போது ஏனோ இனம்புரியாத துயரம் மனசை நெருக்கியது.
அவனது உயிர் இன்று அல்லது நாளை போய்விடும் போல அவனது கடமை அமைந்து அவன் களத்தில் நின்றான். எங்காவது எதேச்சையாக காணும் நேரங்களில் ஒரு சிரிப்பு அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவுமில்லை. அவனை உறவென்று சொல்லிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம்.
1990 மேலும் ஊரிலிருந்து ஆண்கள் , பெண்கள் காணாமற்போனார்கள். அவன் போன கடுமையான பயணத்தில் பலர் இணைந்தார்கள். மீண்டும் இடப்பெயர்வு , குண்டுச் சத்தங்கள் , மரணங்கள் அவலத்தின் பொழுதுகள் அவன் பிறகு காணாமற்போய்விட்டான். பொறுப்பாளராய் உயர்ந்து ஓமந்தையில் நிற்கிறான் எனச் சொன்னார்கள்.
.......,
காலநதியில் எழுதப்பட்ட கதைகள் பல அவை கண்ணீராலும் எழுதப்பட்டு கரைந்து கொண்டேயிருந்தது. அவள் நாட்டைவிட்டுப் பிரிந்தாள். திருமணம் குழந்தைகள் என வாழ்வு மாறிப்போனது. அவன் நடந்த களத்திலிருந்து தூரமாகினாள்.
இடையில் களங்கள் இறுகி தொடர்புகள் அறுந்து உறவுகள் அயல் எல்லாம் எங்கெங்கோ பிரிந்து போனார்கள். அவனும் நினைவுகளிலிருந்து மறந்து போகாமல் பல தோழர்களின் நினைவுகளோடு அவ்வப்போது நினைவுகளோடு வந்து போயிருக்கிறான். உறவொன்றைச் சந்தித்த போது அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் ஒரு தளபதியாக தகுதிநிலை உயர்ந்தானென்று தகவல் சொன்னார்கள். ஒரு பெண் போராளியை திருமணமும் செய்தானென்றும் சொன்னார்கள்.
காலம் 2002.....,மீண்டும் தாயகப்பயணம் போன போது அவனது கடைசித் தங்கையைத் தேடிப்பிடித்தாள். முல்லைத்தீவில் ஒரு அழகான தென்னந்தோப்பு வளவில் குடியிருந்தார்கள். அண்ணா என்ன செய்றான் ? கேட்ட போது அவனது சின்னத்தங்கை அவனைப் பற்றிச் சொன்னாள். சந்திக்கக் கூடிய இடத்தில் அவன் அப்போது இல்லையென்றார்கள். மீண்டும் 2003இல் பிள்ளைகளோடு போன போது கிளிநொச்சியில் அவன் அரசியல் அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். அந்தக்கால அவசரங்களோடு அவனும் அலுவலாகியிருப்பதாக சொன்னார்கள்.
ஒருநாள் அறிவமுது புத்தகசாலையில் அவள் புத்தங்கள் வாங்கப் போயிருந்தாள். பலர் புத்தகக் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவள் ஒவ்வொரு புத்ததங்களையும் பார்த்துப் பார்த்து அது வேணும் இது வேணும் என எடுத்துக் கொண்டிருந்தாள். என்னக்கா கடை போடப்போறியளோ ? புத்தகக் கடையில் நின்ற தம்பியொருவன் கேட்டான்.
மேலும் சிலர் வந்தார்கள். அவள் புத்தங்களை பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். பலசரக்குக் கடைக்கு சீனிச்சரை சுத்தவோ உவ்வளவு புத்தகமும் ஒருவன் சொன்னது கேட்டது. திரும்பிப் பார்த்த போது அவன் தனது முகத்தைக் காட்டாமல் மறுபக்கம் திரும்பி நின்றான். இடுப்பில் பெலிற் கட்டி பிஸ்ரல் செருகிகியிருந்தான். பிஸ்ரல் கட்டிய ஒருவர் புத்தகங்கள் சீனிச்சரை சுத்தவோ புத்தகங்கள் என்றது சட்டென கோபத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டாமல் புத்தகங்களை எடுத்தாள்.
பிள்ளைகள் வெளியில் ஐஸ்கிறீம் வாகனத்தைக் கண்டதும் ஜஸ்கிறீம் வேணுமென அடம்பிடித்தார்கள். பிள்ளைகளுடன் அவளுக்கு உதவியாய் வந்திருந்த தம்பியிடம் சொன்னாள். தம்பி ரெண்டு பேருக்கும் ஐஸ்கிறீம் வேண்டிக் குடுக்கிறீங்களே நான் புத்தகத்தை எடுத்திட்டு வாறன். ஓமக்கா....என்றவன் வாங்கோ நாங்க ஐஸ்கிறீம் வாங்குவம் என பிள்ளைகளை கூட்டிக் கொண்டு தெருவுக்குப் போனான்.
123புத்தகங்களை கொள்வனவு செய்து கொண்டு வெளியில் வந்தாள். பிள்ளைகள் ஜஸ்கிறீமும் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றையும் வைத்துக் கொண்டு தம்பியுடன் நின்றார்கள். அரசியல்துறை அண்ணையொராள் வந்தவர் பிள்ளையளுக்கு ஜஸ்கிறீமும் விளையாட்டுச் சாமானுகளும் வாங்கிக் குடுத்திட்டு போறார் என்றான். உங்கடை ஊராம் உங்களைத் தெரியுமாமெண்டு சொன்னவர். பிள்ளையளுக்கு தான் மாமாவெண்டு சொல்லி உதெல்லாம் வேண்டிக் குடுத்தவர்.
தம்பி சொல்லியும் அது யாரென்பது புரியவில்லை. அவனை நினைவும் வரவில்லை. வீடு போன பின்னர் தம்பியிடம் அவனது பெயரை விசாரித்ததில் அவன் நினைவில் வந்தான். சமாதான செயலகத்தில சொல்லிவிட்டால் ஆளைப் பாக்கலாமக்கா...!
அண்மையாக சந்தித்தவன் பேசாமல் போனது கோபமாக இருந்தது. தம்பி சொன்ன பிறகும் கௌரவம் விடாமல் அவனைச் சந்திக்கும் முயற்சியை எடுக்கவில்லை. எங்கே நிற்கிறாள் யாருடன் நிற்கிறாள் என்பதெல்லாம் நிச்சயம் அறிந்திருப்பான். அப்படியிருக்க அருகில் வந்தும் பேசாமல் போனானென்றால்....திமிர் என தனக்குள் முணுமுணுத்தாள். ஆளாளுக்கு பிடிவாதத்தில் சந்திக்க முயற்சியெடுக்கவில்லை. அவள் ஐரோப்பா திரும்பிவிட்டாள்.
2006இல் இந்தியாவில் இருந்த அவனது சித்தி நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிந்து கதைக்க எடுத்த போது கதையோடு அவனது கதையும் வந்தது. நீயென்னடி 3மாதம் கிளிநொச்சியில் நிண்டியாம் தன்னை ஒருமுறை கூட பார்க்க வரேல்லயெண்டு சொன்னான். ஏனடியாத்தை ஒருக்கா பிள்ளையளையும் காட்டி பாத்திருக்கலாமெல்லே ?
புத்தகக்கடையில கண்டவர் ஏனன்ரி என்னோடை கதைச்சிருக்கலாம் தானே...! பிள்ளையளுக்கு விளையாட்டுச் சாமானுகளை வாங்கிக் குடுத்திட்டு போகத் தெரிஞ்சவர் கதைச்சா என்ன குறைஞ்சே போயிடுவர் ?
நீ தன்னை அடையாளம் பிடிக்கிறியோண்டு பாக்கத்தான் அவன் கடையில கண்டிட்டு கதைக்காமல் போயிருக்கிறான். சீனிச்சரை சுத்தவோ புத்தகமெண்டு சொன்னவனாம்....அப்ப பக்கத்தில தானே நிண்டவனாம்.....! சத்தியமா எனக்கு அடையாளம் தெரியேல்லயன்ரி...! ஏத்தின வரியம் இப்பத்தைய தோற்றத்தை என்னாலை அடையாளம் காண முடியேல்ல...வேணுமெண்டு தானே கதையாமல் போனவர்.....!
பழைய குரல் நினைவிருக்கலாம் என நினைத்தானோ என்னவோ...! அவன் கொஞ்சம் வீம்பு பிடித்தவன் என்பாள் அவளது தங்கை. அதற்காக அருகில் நின்றும் தன்னை அடையாளம் காட்டாமல் போனவன் மீது சொல்ல முடியாத கோபம். ஆளாளுக்கு பிடிவாதம் பிடித்து சந்திக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டு அதுவொரு சின்ன வயசு கால கோபம் போலவே போய்விட்டது.
அவனைப்பற்றி பலரும் கதைத்தார்கள். அவனது பதவிநிலை , பணிகள் , திறமை எல்லாவற்றையும் ஊரவர்கள் தொடக்கம் அவனது பெயரையும் காலம் உச்சரித்துக் கொண்டேயிருந்தது. அவனது அலுவலகத்தில் அவனுக்கு உதவியாளராயிருந்த அவனது துறைசார் போராளியொருவனுடன் ஒருமுறை அலுவல் ஒன்றிற்காக தொடர்பேற்படுத்திய போது அவனைப் பற்றி அடிக்கடி அறியக் கிடைத்தது. ஒருமுறை அவனது உதவியாளர் அவனது நிழற்படமொன்றை மின்னஞ்சலிட்டிருந்தான்.
சொல்லுங்கோ தம்பி அவர் கதைக்காட்டி நானும் கதைக்கமாட்டனாமெண்டு. ஐயோ கடவுளே இந்தக் குழந்தைப்பிள்ளையள் ரெண்டின்ரை தொல்லையும் எனக்கு பெருந்தொல்லையப்பா...! ஏன் அவ கதைக்கமாட்டாவோண்டு அவரும் இவ ஒராள் என் அவர் கதைக்கமாட்டாரோண்டு ....! தம்பி ஒருமுறை கதைத்த போது இப்படித்தான் அலுத்துக் கொண்டான்.
காலம் ஓடியது யுத்தம் மூண்டது. இரத்தமும் அவலமும் தோய்ந்த நாட்களாய் விடியத் தொடங்கியது. தொடர்பில் இருந்த அவனது உதவியாளர் தம்பி இடையிடை தொடர்பு கொள்வான் சுகம் விசாரிப்பான். அவனும் ஆனந்தபுரம் சண்டை முடிவோடு இல்லாமல் போய்விட்டான். சொல்லாமல் கொள்ளாமல் காணாமற் போயிருந்தான்.
மேமாதம் 2009 உலகம் பரபரத்தது தமிழர்கள் மட்டும் கண்ணீரோடும் துயரத்தோடும் அந்தப் பொழுதுகளை வரவேற்றுக் கொண்டார்கள். எல்லாம் மாறியது நினைக்காத சரணடைவு கனவிலும் பார்த்திராத அந்த நிகழ்வு நடந்து....எல்லாம் முடிந்து போனது....பலரின் முடிவு போல அவனும் இறுதியில் சரணடைந்தானா ? சாவை தனக்குத் தானே மூட்டினானா என எதுவும் தெரியாது.
தேடித்திரிந்தவர்களில் அவனும் ஒருவனாய் அவள் தேடினாள். அவனது குடும்பம் அவனது மனைவி , பிள்ளைகள் யாரையும் எங்கும் கண்டுபிடிக்கவில்லை. உறவுகள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் என காணாமற்போனவர்களின் பட்டியலில் அவனும் காணாமற்போயிருக்கிறான்.
இணையத்தில் செய்திகளைத் தேடுகிறாள். அவர் கைது , இவர் கடத்தல் என தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகளும் , செய்திகளும் தூள்பறக்கும் அலசல்களால் நிறைகிறது தமிழ் இணையங்கள். அவனது பெயர் இதுவரை எங்குமே வரவில்லை. துரோகியாய் ஆராயப்பட்டு அவன் வாழ்ந்த வாழ்வை எவரும் இதுவரை கொச்சைப்படுத்தாதது ஆறுதலாக இருந்தது.
அவன் விரும்பியிருந்தால் வெளிநாடொன்றில் வசதியை அனுபவித்து தனது வாழ்நாளை கடத்தியிருக்கலாம். அவனது கணிதத்துறைக் கல்வியைத் தொடர்ந்து வென்றிருந்தால் ஒரு விஞ்ஞானியைக் கூட அவனது குடும்பமும் அவனது ஊரும் பெற்றிருக்கலாம். ஆனால் பதின்மம் மாறாத அந்த வயதில் தேசத்தை நேசித்துப் போனதால் அவன் காணாமல் போனான்.
எல்லோரையும் போல சுயநலமாய் இல்லாமல் பொதுநலமாய் யோசித்து தன்னை மறந்து தேசத்தை நேரித்த போராளிகளை மாவீரர்களை சமகால தமிழ்ச்சாதி கவனிக்கும் கவனிப்பையெல்லாம் பார்க்காமல் மறைந்தவரும் காணாமற்போனவரும் இனி வரவே வேண்டாமென நினைத்துக் கொண்டாள்.
ஒரு வேளை காணாமற்போனவர்கள் திரும்பி வந்து இந்த நிலமையைப் பார்த்தால் எதிரியிடம் பிடிபடாமல் இலட்சியத்தை வெல்ல அணிந்த சயனைட் வில்லைகளை இந்த சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை சகிக்க முடியாமல் தற்கொலைக்காக பயன்படுத்தக் கூடும். அவர்கள் வர வேண்டாம்...காணாமலேயே இருக்கட்டும்.
சின்னப்பிள்ளையள் மாதிரி ஆளாளுக்கு முரண்டு பிடித்து கதைக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டது இப்போது நெஞ்சுக்குள் வலியைத் தருகிறது. நீ முதல் கதைச்சாலென்ன என ஆளாளுக்கு அடம்பிடித்ததையும் ஒருகாலம் விளையாட்டாக ரசித்தது போல இப்போது ரசிக்க முடியவில்லை. இனி என்றுமே திரும்பக் கிடைக்காத அவனும் அவன் போன்றவர்களினதும் நினைவுகள் மட்டும் மீதமாக....!
08.04.2014 (அண்மைய நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் படித்த போது எழுந்த உணர்வும் ஒரு காலத்தின் ஞாபகமும் ஒரு கனவும் தந்த பாதிப்பிலிருந்து இக்கதை பிறந்திருக்கிறது)

No comments:
Post a Comment