கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.
அன்று எங்கள் தீ விரல்கள்
இப்பூமியெங்கும் தணலேற்றும்…..
தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும்
பிறப்புறுப்பை மிதித்தவனும்
மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும் - எங்கள்
விடுதலையின் பொருளறியும்....
12.03.2012
(நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)
2 comments:
"மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும்."
ஆறுதலும் நம்பிக்கையும்
தருகிற வார்த்தைகள்.
நம்பிக்கைகளை சுமந்துகொண்டு
இடிந்துவிடாமல் இருப்போம்.
நம்பிக்கையென்ற ஒற்றைச் சொல்மட்டுமே எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது தீபிகா. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
Post a Comment