நீண்ட நாட்கள் வலைப்பூவில் எழுதவில்லை. மீண்டும் வந்துள்ளேன். எமது மக்களின் அவலங்கள் சுமந்த வாழ்வுகளின் கதைகளை அவர்களின் குரலினூடு எடுத்துக் கொண்டு வருகிறோம்.
நேசக்கரம் இது துயரப்படும் எமது மக்களுக்கான ஆதரவுக்கரமாக ஆரம்பித்துள்ளோம். பல நண்பர்களின் முயற்சியில் 3வருடங்களுக்கு மேலாக எம்மால் இயன்றதை செய்து வந்தநாம் 2010 முதல் யேர்மனியில் பதிவு செய்து ஒரு நிறுவனமாக எழுந்துள்ளோம். வலைப்பூ நண்பர்களையும் எமது நேசக்கரத்தோடு கைகோர்க்கும்படி அழைக்கிறோம்.
இது நேசக்கரம் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையம். வாருங்கள் வந்து பாருங்கள். உங்கள் கரங்களையும் இணையுங்கள்.
http://nesakkaram.org/
தடுப்பில் உள்ள தனது போராளிக் கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கண்ணீரோடு வாழும் தாயின் குரல் இது.
இக்குரல் போல ஆயிரமாயிரம் குரல்களின் துயர்களை நேசக்கரம் ஊடாய் எடுத்து வருகிறோம்.
3 comments:
வணக்கம்
உங்களின் ஒலி யேற்றங்கள் என்னால் கேடக இயலவில்லை
முன்பே உங்களிடம் தெரியப்படுத்தவேண்டும் என இருந்தேன்
இராஜராஜன்
வாழ்த்துக்கள்!மாற்றத்துக்கும் ,இப்போது ஆரம்பித்திருக்கும் சேவைக்கும்!!!!!!!
கருத்திட்ட யோகா ராஜன் இருவருக்கும் நன்றிகள்.
ராஜன், ஒலித்தொகுப்புகள் அனைவராலும் கேட்கக்கூடியதாகவுள்ளதாக உள்ளது. மறுபடி முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் கேட்ட முடியாவிடில் தெரிவியுங்கள்.
அனைவரையும் நேசக்கரத்தோடு இணையுமாறு வேண்டுகிறோம். நேசக்கரம் அங்கத்தவராகலாம் அல்லது உங்களால் இயன்ற உதவியை அவலப்படும் எமது உறவுகளுக்குச் செய்ய வாருங்கள்.
Post a Comment