வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் (32வயது) தீக்குளித்துள்ளார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. இரத்தினசிங்கம் பிரபாகரன் என்ற மேற்படி நபர் அண்மையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆயினும் சரியான மருத்துவமோ அல்லது எதுவித சிகிச்சைக்கும் அனுமதிக்கப்படாதிருந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் அவர்கள் நேற்று முன்தினம் தன்னை மறந்த நிலையில் தனது ஒருமாதக் குழந்தை தனது மனைவி மற்றும் தனது தாயாரையும் கத்தியால் வெட்டியுள்ளார் அதன் பின்னரேயே தன்னைத் தீமூட்டியுள்ளார். இவரது குழந்தை , மனைவி , தாயார் மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
செட்டிகுளம் மருத்துவமனையிலிருந்து மயக்கமருந்து கொடுக்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது உடல்நிலைமை 50வீதமே செயல் நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முகாமில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் ஆசிரியராகவும் தனது பணியினைச் செய்து வந்துள்ள பிரபாகரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தவரை மாணவர்களுக்கு இலவசகல்வி வசதிகள் மற்றும் சமூக ஆர்வம் மிக்க இளைஞராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
தொடர்ந்த அகதி முகாம் வாழ்வு முகாமிலுள்ள வசதியீனங்கள் பற்றியெல்லாம் தனது நண்பர் ஒருவரிடம் அடிக்கடி மனவேதனைப்பட்டுள்ளார். தொடர்ந்த மன அழுத்தமும் சரியான மருத்துவமும் கிடைக்காமையால் இத்தகையதொரு முடிவை இவர் எடுக்கக் காரணமாகவுள்ளதாக தெரிகிறது.
2 comments:
எவ்வளவு பெரிய கதை!!
உங்கள் கதை தெளிவாகப் பிசிறில்லாமல் செல்கிறது!! தியாகங்களுக்கு பலன் நிச்சயம் உண்டு!!
Post a Comment