பட்டினித் தீ மூட்டிய பெருந்தீ
பாரதப் பேரரசின் பாராமுகம்
பலியெடுத்த பெரு வீரன்.
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட
மனுநீதிச் சோழன்.
எங்கள் மனமெங்கும் எரிகின்ற
அணையாச்சுடர்.
ஆண்டுகளாய் அடிமையின் மீதமாய்
நீண்டு போன வரலாற்றில்
தமிழர் நிலைமாற்றப் பிறந்த
நியாயத்தின் சுடர்.
நிலம் வாழும்
வரையுந்தன் வரலாறும்
வாழ்வின் அர்த்தமும்
வீரமும் ஈகமும் - என்றும்
வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
- சாந்தி நேசக்கரம் -
rameshsanthi@gmail.com